உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புடினை மீறி உக்ரைன் செய்த செயலால் அதிர்ச்சி | Russia vs Ukraine | US ATACMS | ATACMS enters Russia

புடினை மீறி உக்ரைன் செய்த செயலால் அதிர்ச்சி | Russia vs Ukraine | US ATACMS | ATACMS enters Russia

மூன்றாம் உலக போரையை கொண்டு வந்து விடும் அளவுக்கு திடீரென விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது ரஷ்யா-உக்ரைன் போர். ரஷ்யாவின் குர்ஸ்க் ஏரியாவின் ஒரு பகுதியை உக்ரைன் ராணுவம் கைப்பற்றியது. இது ரஷ்யாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இழந்த பகுதியை மீட்பதற்காக உக்ரைனில் கடும் தாக்குதலை நடத்தி ரஷ்யா தாண்டவம் ஆடி வருகிறது. உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் வழங்கி வரும் அமெரிக்கா, Army Tactical Missile System என்ற சக்தி வாய்ந்த ஏவுகணையை அந்த நாட்டுக்கு கொடுத்து இருந்தது. ஆனால் தங்கள் அனுமதி இன்றி அதை பயன்படுத்தக் கூடாது என்று உக்ரைனிடம் சொல்லி இருந்தது. இப்போது குர்ஸ்க் நகரில் சண்டை முற்றியதால் அதை பயன்படுத்த அமெரிக்க அதிபர் பைடன் பச்சை கொடி காட்டினார். கோபத்தில் கொந்தளித்த ரஷ்ய அதிபர் புடின், அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வகையில் தங்கள் நாட்டின் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தார். இது உலக நாடுகளையே அதிர வைத்துள்ளது. குறிப்பாக மூன்றாம் உலகப் போர் பதற்றத்தை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ நாடுகளில் கூடுதல் பதற்றம் நிலவுகிறது. போதிய அளவு அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளும்படி சில ஐரோப்பிய நாடுகள் மக்களை அறிவுறுத்தி உள்ளன. புடினின் அணு ஆயுத மிரட்டல் எதிரொலியால் அமெரிக்காவின் Army Tactical Missile சிஸ்டத்தை உக்ரைன் பயன்படுத்துமா என்ற கேள்வி எழுந்தது.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை