உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் அறிவித்த சில மணிநேரத்தில் உக்ரைனுக்கு விழுந்த அடி russia unleashed attack| Ukraine

டிரம்ப் அறிவித்த சில மணிநேரத்தில் உக்ரைனுக்கு விழுந்த அடி russia unleashed attack| Ukraine

இதுவரை இல்லாத வகையில் உக்ரைனை ஓங்கி அடித்த ரஷ்யா! ஒரே இரவில் 714 டார்கெட் தொடர்ந்து குண்டு மழை ரஷ்யா- உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடக்கிறது. இதுவரை இல்லாத வகையில் பெரிய அளவில் ரஷ்யா தாக்குதல் நடத்தி இருக்கிறது. நேற்று ஒரே இரவில் 728 ட்ரோன்கள், 13 ஏவுகணைகள் என 741 இலக்குகளை குறிவைத்து தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்தது. அவற்றில் 718 ட்ரோன்களை உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் லுட்ஸ்க் நகர் அதிகம் குறிவைக்கப்பட்டது. இது தவிர, டினிப்ரோ, சைட்டோமிர், கீவ், சுமி, கார்கிவ், செர்காசி, செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களிலும் குண்டுகள் விழுந்ததில் சேதம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த வெறி தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டித்தார். போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில், ரஷ்யா அதையெல்லாம் புறக்கணித்து இந்த பயங்கர தாக்குதலை நடத்தி இருக்கிறது. ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய அவசர தேவையை இது காட்டுகிறது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்துவதை விட்டுவிட்டு, போரை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி ரஷ்யாவை சிந்திக்க வைக்க, எப்படி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் கூட்டணிகளுக்கு தெரியும். இந்த விஷயத்தில் அமைதியை விரும்பும் அனைவரும் செயல்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை