உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 8 ஆண்டுக்கு பிறகு பாக். செல்லும் முதல் தலைவர் S Jaishankar visit Pakistan Shanghai Summit Octobe

8 ஆண்டுக்கு பிறகு பாக். செல்லும் முதல் தலைவர் S Jaishankar visit Pakistan Shanghai Summit Octobe

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இந்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இஸ்லாமாபாத்தில் வரும் 15,16 ஆகிய தேதிகளில் மாநாடு நடக்கிறது. மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து பாகிஸ்தான் கடந்த 30ம்தேதி அழைப்பிதழ் அனுப்பியிருந்தது. அதை உடனே உறுதிப்படுத்திய மத்திய வெளியுறவுத்துறை மாநாட்டில் பங்கேற்கப்போவது யார் என்பதை தெரிவிக்கவில்லை. இதனால் இந்தியா பங்கேற்குமா பங்கேற்காதா? என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தானில் எகிறியது. ஷாங்காய் மாநாட்டில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அவர் தலைமையிலான குழு இஸ்லாமாபாத்தில் 2 நாள் தங்கியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை