உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 31 கிலோ தங்கம் எங்கே? சபரிமலை சாமி சிலை டெஸ்ட் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி | Travancore Devaswom Board

31 கிலோ தங்கம் எங்கே? சபரிமலை சாமி சிலை டெஸ்ட் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி | Travancore Devaswom Board

சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னதி, கூரை மற்றும் துவாரபாலகர் சிலைகள் போன்ற அம்சங்கள் மிக பழமையானவை. கோயிலை பாதுகாக்கும் பொறுப்பு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உள்ளது. 1990களில், இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா பல கோயில்களுக்கு நன்கொடை வழங்கினார். செப்டம்பர் 1998ல் சபரிமலை கோயிலின் சன்னதி, கூரை மற்றும் இரண்டு துவாரபாலகர் சிலைகளை தங்கம் மற்றும் செம்பால் அமைக்கும் பணிக்காக 31 கிலோ தங்கம் கொடுத்தார். அதனுடன் 1,900 கிலோ செம்பும் நன்கொடையாக வழங்கப்பட்டது. விஜய் மல்லையா கொடுத்த தங்கம் மற்றும் செம்பு சேர்த்து கோயிலின் கூரையும் புனரமைக்கப்பட்டது. இந்த நிலையில் சபரிமலை கோயில் தங்கம் மற்றும் நகை பராமரிப்பு சமீபத்தில் சர்ச்சைகளுக்கு ஆளானது. 2019ல் தங்க நன்கொடைகள் தொடர்பான மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2021 வரை கோயிலின் நகை பற்றிய விரிவான கணக்கு பதிவுகள் இல்லாமல், பொட்டலங்களின் எண்ணிக்கை மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. இது பல விதமான மோசடிக்கு வழி வகுக்கும் என அப்போதே நிபுணர்கள் எச்சரித்தனர். அவர்கள் சொன்னது போலவே சபரிமலை கோயில் நகை விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.

அக் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை