சபரிமலைக்கு தினசரி பக்தர்கள் அனுமதியில் புதிய கட்டுப்பாடு | Sabarimala | Devotees | Online booking |
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டலகால பூஜைகள் நவம்பர் 16ல் தொடங்குகிறது. 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்தது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து திரும்ப தேவையான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பக்தர்கள் வருகை அதிகரித்ததாலும், கூட்டத்தை ஒழுங்குபடுத்த சரியான நடவடிக்கை எடுக்க தவறியதாலும் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். பலர் ஐயப்பனை தரிசிக்காமல் வழியிலேயே இருமுடியை பிரித்து விட்டு வீடு திரும்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது.