உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல்லை பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எல்.முருகன் கண்டனம் Sacred thread issue in Nellai| L Murugan

நெல்லை பூணூல் அறுப்பு சம்பவத்துக்கு எல்.முருகன் கண்டனம் Sacred thread issue in Nellai| L Murugan

பூணூல் அணிந்து சென்றவரிடம் அத்து மீறிய மர்ம கும்பல் திருநெல்வேலியை சேர்ந்தவர் அகிலேஷ் வயது 24. கடந்த 21ம் தேதி தியாகராஜ நகரில் உள்ள ஆஸ்திக சமாஜத்திற்கு நடந்து சென்றார். டிவிஎஸ் நகர் அருகே 4 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துடன், அவர் அணிந்திருந்த பூணுாலை அறுத்துவிட்டு டூவீலரில் தப்பிச் சென்றதாக பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். சம்பவம் பற்றி அறிந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அகிலேஷ் வீட்டுக்கு சென்று அவரையும், அவரது குடும்பத்தாரையும் சந்தித்து பேசினார். அவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுப்பதுடன் சம்பவம் குறித்து விசாரிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை