சயீப் அலிகான் சொத்துக்களை கையகப்படுத்தும் மத்திய அரசு Government of india take over Pataudi Family
நடிகர் சயீப் அலி கானின் வீட்டில் புகுந்த கொள்ளையன், அவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சயீப் அலி கானுக்கு இன்னொரு அதிர்ச்சி செய்தி வந்து சேர்ந்துள்ளது. 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது குடும்ப சொத்துக்களை மத்திய அரசு கையகப்படுத்தும் என்ற செய்திதான் அது. அது என்ன சொத்துக்கள் என பார்ப்போம். 1947 ல் இந்திய பிரிவினையின்போது, பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற அசையா சொத்துக்களை எதிரியின் சொத்துக்கள் என முத்திரை குத்தி மத்திய அரசு கையகப்படுத்தியது. இதற்காக, 1968 ல் எதிரி சொத்து பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.