/ தினமலர் டிவி
/ பொது
/ வசூலுக்கு சென்ற அதிகாரியை சிறை பிடித்த மக்கள் | Salem | Municipality | Water Tax
வசூலுக்கு சென்ற அதிகாரியை சிறை பிடித்த மக்கள் | Salem | Municipality | Water Tax
சேலம் ஆத்தூர் அருகே உள்ளது நரசிங்கபுரம் நகராட்சி. இங்குள்ள 10 வது வார்டு வடக்கு தலைநகர் பகுதியில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளவர்களிடம் வரி வசூல் செய்ய நகராட்சி பொறியாளர் ஜெயமாலினி மற்றும் பொதுப்பணி மேற்பார்வையாளர் சுரேஷ் சென்றனர். அப்போது வரி செலுத்தவில்லை என்றால் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் பகுதிக்கு 18 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் வருகிறது. அதுவும் முறையாக வழங்குவதில்லை. வரி மட்டும் வேண்டுமா என கேட்டு அப்பகுதியினர் கேட்டனர். வீடியோ பதிவும் செய்ததால் இருதரப்புக்கும் தள்ளு முள்ளு உருவாகியது.
மார் 22, 2025