துப்பாக்கிசூடு சம்பவ குற்றப்பத்திரிகையில் தகவல்! Salman Khan | Gangster Lawrence Bishnoi
சல்மான் கான் பயப்படணும் வீட்டைநோக்கி பலமுறை சுடுங்கள்! ஒரு மானை வேட்டையாடிவிட்டு பல ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்து வருகிறார், பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவர் வேட்டையாடிய அபூர்வ வகை மான் இனத்தை, பிஷ்னோய் மக்கள் புனிதமாக வழிபட்டு வருகின்றனர். இதனால் சல்மான் கான் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிஷ்னோய் இனத்தை சேர்ந்த ganster லாரன்ஸ் பிஷ்னோய் வலியுறுத்தினார். ஆனால் சல்மான் கான் மன்னிப்பு கேட்காததால் பல முறை சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்தார். கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கான் வீடு மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். இந்த சம்பத்துக்கு பிறகு சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் 1,735 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் சல்மான் கானிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இடம் பெற்று இருக்கிறது.