/ தினமலர் டிவி
/ பொது
/ எல்லாம் முடிந்ததும் சாவகாசமாக வந்த அதிகாரிகள் Sand theft| kadamba tank| Thoothukudi
எல்லாம் முடிந்ததும் சாவகாசமாக வந்த அதிகாரிகள் Sand theft| kadamba tank| Thoothukudi
தூத்துக்குடி குளத்தில் சட்டவிரோதமாக மண் அள்ளிய லாரிகள், ஜேசிபிகள் தான் இப்படி தப்பி செல்கின்றன. தமிழகத்தில் விவசாயம், மண்பாண்ட தொழிலுக்கு குளத்தில் இருந்து விதிகளுக்கு உட்பட்டு டிராக்டரில் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்தது. வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அனுமதியுடன், தோட்டக்கலைத்துறை மேற்பார்வையில் வண்டல் மண் எடுக்கலாம். ஆனால், தூத்துக்குடியில் மிகப்பெரிய நீர் நிலையான கடம்பா குளத்தில் சட்டவிதிகளை மீறி ஜேபிசி இயந்திரங்கள் மூலம் லாரிகளில் மண் அள்ளி செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். சமூக வலைதங்களிலும் பரவியது.
ஜூலை 31, 2024