கைது செய்யாமல் விடமாட்டோம்; காத்திருந்து பிடித்த போலீசார்
வீடு புகுந்து கதவு உடைத்து... மணல் கடத்தியவரை பிடிக்க நடந்த களேபரம்! திருநெல்வேலி நாங்குநேரி அருகே வெங்கட்ராயபுரத்தில் நேற்று முன்தினம் ஒரு கும்பல் ஜேசிபி மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டது. நாங்குநேரி கூடுதல் எஸ்பி பிரசன்னகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் அந்த கும்பல் ஜேசிபி, டூவீலர்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியது. வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த எண்களை வைத்து உரிமையாளரை கண்டுபிடித்தனர். தூத்துக்குடி சாத்தான் குளத்தை சேர்ந்த கங்கை ஆதித்தன் மணல் கடத்தலில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். இரவோடு இரவாக அவரை தேடி வீட்டுக்கு சென்றனர். வீட்டின் ஒரு அறையில் தாழிட்டு கொண்டு பதுங்கியிருந்தார் ஆதித்தன். போலீசாரை கைது செய்ய விடாமல் தடுத்து குடும்பத்தினரும், அங்கிருந்த சிலரும் வாக்குவாதம் செய்தனர். வீட்டுக்குள் புகுந்த கூடுதல் எஸ்பி பிரசன்னகுமார், ஆதித்தன் இருந்த அறையின் கதவை உடைத்து அவரை கைது செய்ய முயன்றார்.