உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடத்தல் கும்பலின் ஆட்சி: அன்புமணி கண்டனம்

கடத்தல் கும்பலின் ஆட்சி: அன்புமணி கண்டனம்

அரியலூர் செந்துறை அருகே வெள்ளாற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுகிறது. இதை தடுக்க இரவு நேரங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சின்னாசி நல்லூர்- அங்கனூர் சாலையில், தளவாய் காவல் நிலைய கான்ஸ்டபிள் தமிழ் செல்வன், ஊர்காவல் படை வீரர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அந்த வழியாக வந்த டாடா ஏசி வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல், 2 பேர் மீதும் மோதிவிட்டு சென்றது. அந்த வாகனத்தில் டிரைவர் தவிர மேலும் சிலர் இருந்துள்ளனர். தூக்கி வீசப்பட்டதில், கான்ஸ்டபிள் தமிழ் செல்வனுக்கு கை, கால்கள், தலையில் காயம் ஏற்பட்டது. வெங்கடேசனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை