உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளர்கள் மீண்டும் குண்டு கட்டாக கைது! | Sanitation workers | Chennai workers Protest | CM

தூய்மை பணியாளர்கள் மீண்டும் குண்டு கட்டாக கைது! | Sanitation workers | Chennai workers Protest | CM

பணி நிரந்தரம் மற்றும் தனியார் மயமாக்குவதை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நான்கு நாட்களாக சென்னையை சேர்ந்த 13 தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இன்று சென்னை வேப்பேரி கமிஷனர் ஆபீஸ் அருகே உள்ள மணி அம்மையார் சிலைக்கு மனு கொடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் மயக்கத்தில் சுருண்டு விழுந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். Breath சென்ற மாதம் சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் பெரிதாக வெடித்தது. அதை தொடர்ந்து சமீப நாட்களாக தூய்மை பணியாளர்கள் எங்கே போராட்டம் நடத்தினாலும் போலீசார் கூண்டோடு கைது செய்து அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் போலீசார் தங்களை கைது செய்து அழைத்து செல்லும் போது பெரும் சித்திரவதையை அனுபவிக்கிறோம். அறவழியில் போராடும் எங்களை இப்படி அலைக்கழிப்பது ஏன் என தூய்மை பணியாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

செப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை