உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நிஜ்ஜார் கொலைக்கு ஆதாரம் கேட்டும் கனடா தராதது ஏன்? sanjay verma| india canada issue| nijjar

நிஜ்ஜார் கொலைக்கு ஆதாரம் கேட்டும் கனடா தராதது ஏன்? sanjay verma| india canada issue| nijjar

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இதை இந்தியா மறுத்து வந்தது. அதற்கான ஆதரங்களை கேட்டது. ஆனால், நிஜ்ஜார் கொலைக்கு பின்னால், கனடாவில் இருக்கும் இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் இருப்பதாக கனடா சொன்னது. இதனால் இரு நாடுகளின் உறவில் ஏற்பட்ட விரிசல் முற்றியது. இதை கண்டித்த இந்தியா, அங்குள்ள இந்திய தூதர் உட்பட 6 அதிகாரிகளை திரும்ப பெற்றது. இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா சமீபத்தில் பேட்டி அளித்தபோது, ஆதாரம் இல்லாமல் கனடா அரசு தங்கள் மீது குற்றம் சாட்டுவதாக கூறியிருக்கிறார். காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடா உளவுத்துறையான CSIS ன் சொத்துக்கள் என்பது எனக்கும் தெரியும். இது எனது குற்றச்சாட்டு; அதற்கான எந்த ஆதாரத்தையும் நான் தரவில்லை என்றார். நிஜ்ஜார் கொலையில் கனடா ஆதரங்களை காட்டாமல் எப்படி இந்தியா மீது குற்றம் சாட்டுகிறதோ அதே பாணியில் தூதர் சஞ்சய் குமாரும் கூறினார்.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !