உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீனியர் சிட்டிசன்களுக்கான சஞ்ஜீவனி யோஜனா திட்டம் AAP Announces Sanjeevani Yojana for Elderly

சீனியர் சிட்டிசன்களுக்கான சஞ்ஜீவனி யோஜனா திட்டம் AAP Announces Sanjeevani Yojana for Elderly

டில்லி சட்டசபைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, ஹாட்ரிக் வெற்றி பெற துடிக்கிறது. இண்டி கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசை கழற்றிவிட்டுவிட்டு ஆம் ஆத்மி தனியாக போட்டியிட போகிறது. பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் டில்லி சட்டசபை தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்தடுத்து இலவச வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறார். மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்க டில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்த தொகை, 2100 ரூபாயாக உயர்த்தப்படும் என கெஜ்ரிவால் அறிவித்திருந்தார் இப்போது, 60 வயதுக்கு மேற்பட்ட முத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

டிச 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை