வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இங்கேயும் தேர்தல் பத்திர நிதி என்று பல்லாயிரம் கோடிகள் ஊழல் செய்து கம்பெனிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்தவர்கள் இன்னும் பதவியில் இருக்கிறார்கள்.
தேர்தல் நிதி வழக்கில் முன்னாள் பிரான்ஸ் அதிபருக்கு தண்டனை Paris Court verdict |France Ex President|
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி. வயது 70. இவர் 2007ல் நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பிரசார செலவுக்கு லிபியா சர்வாதிகாரி முயம்மர் கடாஃபியிடம் Muammar Gaddafi சர்கோசி நிதி பெற்றார் என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. சர்கோசி 2005ல் பிரான்ஸ் உள்துறை அமைச்சராக இருந்தார். அப்போது கடாஃபியுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. 2007 அதிபர் தேர்தல் செலவுகளுக்கு நிதி தரும்படியும், அதற்கு பதில் மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவுக்கு நல்ல உறவு ஏற்பட உதவி செய்வதாகவும் சர்கோசி கடாஃபியிடம் ஒப்பந்தம் செய்தார் என, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் உடையவை என சர்கோசி கூறினார். எதிர்க்கட்சிகள் பாரீஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. விசாரணை முடிவில் கடாஃபிக்கு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து சர்கோசி குற்றசதியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து பாரீஸ் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் யூரோ அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் அதிபர் சர்கோசி மேல் முறையீடு செய்வேன் என கூறினார். இருப்பினும் பிரான்ஸ் சட்டப்படி தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பினாலும் சிறைக்கு போன பிறகுதான் அதை செய்ய முடியும். இன்று நடந்திருப்பது, மிக மோசமான ஆட்சியை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது என்று சர்கோசி கூறினார். நான் சிறையில் தூங்க வேண்டும் என அவர்கள் விரும்பினால் அதற்கும் நான் தயார் என்றார்
இங்கேயும் தேர்தல் பத்திர நிதி என்று பல்லாயிரம் கோடிகள் ஊழல் செய்து கம்பெனிகளை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்தவர்கள் இன்னும் பதவியில் இருக்கிறார்கள்.