வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்ன சார் தர்மஸ்தலா பிரச்சனையில் தனது பெயர் அடிபடும் போது உண்ணாவிரதம். எங்கேயோ இடிக்குதே?
ஆஸ்பிடலில் உண்ணாவிரதம் தொடர்கிறார் சசிகாந்த் செந்தில் | Sasikanth Senthil | Congress MP | Sasikanth
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை, மத்திய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆக., 30ல் காங்., எம்.பி., சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் தொடங்கினார். திருவள்ளூரில் எம்.பி., அலுவலகம் அருகில் மூன்றாம் நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, போலீசார் அவரை ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தன்னிச்சையாக உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார். சக எம்பிக்கள், டில்லி தலைமை, மாநிலத் தலைமை என யாரிடமும் சொல்லவில்லை. 7ம் தேதி ஓட்டு திருட்டை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் திருநெல்வேலியில் காங்கிரஸ் மாநாடு நடக்க உள்ளது. இதன் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளாரா என தமிழக காங்., கோஷ்டி தலைவர்கள், கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை பேசுகையில், ஓட்டு திருட்டு தொடர்பான விழிப்புணர்வை மடை மாற்றும் செயலாக உண்ணாவிரதப் போராட்டம் உள்ளது. அவரது நோக்கம் சரியானது தான். இப்போது ஓட்டு திருட்டு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் சூழலில், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என கூறி உள்ளார். தமிழக காங்., முன்னாள் தலைவர்கள், சிட்டிங் எம்பிக்கள், சசிகாந்த் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. சசிகாந்த் வெளியிட்ட வீடியோவில், என் கோரிக்கையை, பிரதமர் மோடி, மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு தமிழகம் எடுத்து செல்ல வேண்டும். என் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என தெரிவித்துள்ளார்.
என்ன சார் தர்மஸ்தலா பிரச்சனையில் தனது பெயர் அடிபடும் போது உண்ணாவிரதம். எங்கேயோ இடிக்குதே?