/ தினமலர் டிவி
/ பொது
/ குண்டு வெடிப்பு அரக்கன் சாதிக் மீண்டும் கைதான பகீர் | tailor raja sathik | 1998 covai serial blast
குண்டு வெடிப்பு அரக்கன் சாதிக் மீண்டும் கைதான பகீர் | tailor raja sathik | 1998 covai serial blast
கோவை குண்டு வெடிப்பு கொடூரன் மேலும் 2 சம்பவங்களில் அதிரடி கைது டெய்லர் ராஜா செய்த பகீர் கஸ்டடி எடுக்கும் போலீஸ் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சாதிக் என்ற டெய்லர் ராஜா, 29 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளான். அவனது முழு பின்னணியும் வெளியாகி அதிர வைத்துள்ளது. கோவையில் 1998ம் ஆண்டில் 12 கிலோ மீட்டர் சுற்றளவில் 11 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. 58 பேர் உயிரிழந்தனர்; 2,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாட்ஷா, செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 160 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜூலை 25, 2025