உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இதுவரை மட்டுமே 101 பேர்: பின்னணி காரணம் என்ன? | Saudi Arabia | Saudi Arabia Court

இதுவரை மட்டுமே 101 பேர்: பின்னணி காரணம் என்ன? | Saudi Arabia | Saudi Arabia Court

இந்த தப்பு செஞ்சா தலை இருக்காது சளைக்காமல் வெட்டி தள்ளும் சவுதி! உலகில் மிக கடுமையான சட்ட திட்டங்களை உடைய நாடு சவுதி அரேபியா. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அங்கு சாதாரணம். பொதுவாக போதை பொருள் கடத்தல், கற்பழிப்பு, கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 2019ல் ஷியா பிரிவு இஸ்லாமியத்தை பரப்பியவர்களுக்கும், அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2024ல் இதுவரை 101 வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2023, 2022 ஆண்டுகளை ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு அதிகம். மனித உரிமை அமைப்புகள் இதனை விமர்சித்து வருகின்றன. 2023ல் சீனா, ஈரானுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான மரணதண்டனையை நிறைவேற்றிய நாடாக சவுதி அறியப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 34 வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்கொள்கின்றனர். மரணதண்டனை விதிப்பதுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கடந்த சனியன்று ஏமனை சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ