பெட்ரோல் விலை குறையுமா? வளைகுடாவில் வெடித்த மறைமுகப்போர் | Saudi Aramco | Strait of Hormuz
உலக பொருளாதாரத்தை உலுக்கப் போகும் அதிரடி ஆட்டத்தை சவுதி அரேபியா தொடங்கியிருக்கிறது. கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஆசிய நாடுகளுக்கு விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையை ஒரே மாதத்தில் பேரலுக்கு 11 டாலர் வரை குறைத்துள்ளது சவுதி அராம்கோ நிறுவனம். சந்தை நிபுணர்கள் 8 டாலர் வரை குறையும் என எதிர்பார்த்த நிலையில், அதையும் தாண்டி 11 டாலர் சரிவை அறிவித்து உலக நாடுகளை அதிரவைத்துள்ளது சவுதி. இந்த விலை சரிவுக்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம். முதல் காரணம், மத்திய கிழக்கில் நிலவி வந்த ஈரான் போர் தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. போர் உச்சத்தில் இருந்தபோது, உலக எண்ணெய் போக்குவரத்தின் இதய பகுதியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இதனால் சவுதி தனது எண்ணெய் விநியோகத்தை செங்கடலில் உள்ள வேறு துறைமுகத்திற்கு மாற்ற வேண்டி இருந்தது. ஆனால், தற்போது போர் பதற்றம் தணிந்து ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சவுதியின் பிரதான தளமான ராஸ் தனுராவிலிருந்து 90 சதவிகித ஏற்றுமதி மீண்டும் நடக்க தொடங்கி உள்ளது. இதோடு மட்டுமல்லாமல், சவுதி தலைமையிலான ஓபெக் கூட்டமைப்பு நாடுகள், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தங்களின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி இலக்கை மேலும் உயர்த்த முடிவு செய்துள்ளன. இதனால் சர்வதேசச் சந்தைக்கு எண்ணெய் விநியோகம் மிகத் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியுள்ளது. #SaudiAramco #CrudeOil #OilPriceCut #GlobalEconomy #BrentCrude #StraitOfHormuz #MiddleEastNews #WorldNews2026 #Geopolitics #OPECPlus