ஒரே குடும்பத்தில் 18 பேர் மரணம்: அசாருதீன் கட்டிப்பிடித்து ஆறுதல் | Saudi bus tragedy | PM Modi
ஒரே குடும்பத்தில் 18 பேர் நெஞ்சை பிளக்கும் தகவல் இது விபத்துதானா? உறவினர் சந்தேகம் இந்தியாவில் இருந்து உம்ரா புனித பயணம் சென்ற 45 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் நடந்த பயங்கர விபத்தில் உயிரிழந்தனர். மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சொகுசு பஸ்சில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது, டீசல் டேங்கர் லாரியும் பஸ்சும் மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. 20 பெண்கள், 11 குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர். அனைவருமே இந்தியர்கள். பெரும்பாலானவர்கள் ஐ தராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியானதாக முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால், இப்போது, ஒரே குடும்பத்தில் 18 பேர் இந்த கோர விபத்தில் இறந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. அதை ஐதராபாத்தில் வசிக்கும் உறவினர் உறுதிப்படுத்தி உள்ளார்.