உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக்-சவுதி ராணுவ ஒப்பந்தத்தில் பகீர் அம்சங்கள் | saudi pakistan defence pact | ind vs pak | pahalgam

பாக்-சவுதி ராணுவ ஒப்பந்தத்தில் பகீர் அம்சங்கள் | saudi pakistan defence pact | ind vs pak | pahalgam

சவுதி அரேபியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப், அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில், அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தப்படி ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றால் மற்றொரு நாடு ராணுவ உதவி வழங்க வேண்டும். அதாவது, பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு பிரச்னை என்றால், சவுதி ராணுவம் அனுப்பி வைக்கப்படும். சவுதிக்கு பிரச்னை என்றால் பாகிஸ்தான் ராணுவம் களம் இறங்கும். உதாரணத்துக்கு ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் வெடித்தது. வெறும் 4 நாட்களில் பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைத்தது இந்தியா. இப்படிப்பட்ட போர் இன்னொரு முறை வெடித்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவுதி ராணுவம் நேரடியாக களம் இறங்கும் என்பது தான் ஒப்பந்தத்தின் சாராம்சம். இதை இப்போது பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் உறுதி செய்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் உள்ளூர் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதி ராணுவம் களம் இறங்குமா என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கவாஜா, ஆம், நிச்சயம் களம் இறங்கும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது ஒரு கூட்டு ராணுவ ஒப்பந்தம். சவுதி அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக யாராவது தாக்குதல் நடத்தினால், கண்டிப்பாக இரு நாட்டு ராணுவமும் கூட்டாக களம் இறங்கி அதை முறியடிக்கும் என்றார். இந்தியாவை போல் பாகிஸ்தானிடமும் அணு ஆயுதங்கள் இருக்கின்றன. இந்தியாவிடம் 180 அணு ஆயுதம் இருக்கிறது. பாகிஸ்தான் 170 வைத்திருக்கிறது. பாகிஸ்தான் தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் முழுக்க முழுக்க இந்தியாவை எதிர்கொள்வதற்காகவே தயாரிக்கப்பட்டவை என்று கூறி வருகிறது. ஆனால் இப்போது தங்களின் அணு சக்தியை இக்கட்டான நேரத்தில் சவுதிக்கும் கொடுப்போம் என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கூறி உள்ளார். இது பற்றி ராணுவ ஒப்பந்தத்தில் வெளிப்படையாக எதுவும் இல்லை என்றாலும், அணு சக்தி வழங்குவதும் முக்கிய அம்சம் என்று அவர் கூறினார். சவுதி, பாகிஸ்தான் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் கிட்டத்தட்ட நேட்டோ நாடுகள் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் மாதிரியானது. நேட்டோ ஒப்பந்தத்தின் பிரிவு 5 உடன் இந்த ஒப்பந்தம் ஒத்துப்போகிறது. நேட்டோவை போல் முஸ்லிம் நாடுகளை ஒன்று திரட்டும் முயற்சிக்கான முதல் படி தான் இந்த ஒப்பந்தம் என்றும் சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் எப்படி ஒன்று சேர்ந்து நேட்டோ அமைப்பை உருவாக்கினவோ, அதே போல் முஸ்லிம் நாடுகள் எல்லாம் சேர்ந்து ஒரு ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்க பல ஆண்டுகளாக மறைமுக பேச்சு நடக்கிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாகவே சவுதி, பாகிஸ்தான் ராணுவ ஒப்பந்தம் அமைந்து இருக்கிறது. இது பற்றி பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. புதிய முஸ்லிம் நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, இப்போதைக்கு அது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்கான கதவை நாங்கள் மூடிவிட்டதாக சொல்லமாட்டோம் என்றார். இதன்மூலம் முஸ்லிம் நாடுகளுக்கான நேட்டோ வந்தாலும் ஆச்சர்யம் இல்லை. பாகிஸ்தானை தாக்க வேண்டும் என்றால் இனி சவுதியையும் இந்தியா கணக்கில் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். #SaudiPakistanDefencePact #IndiaVsPakistan #Geopolitics #InternationalRelations #SecurityCooperation #SouthAsia #MiddleEast #MilitaryStrength #Diplomacy #RegionalSecurity #StrategicPartnership #DefenseNews #PakistanArmy #SaudiDefense #ConflictResolution #PeaceProspects #GlobalStrategy

செப் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி