உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விசாரணைக்கு ஆஜராக ராகுலுக்கு புனே கோர்ட் உத்தரவு Savarkar defamation case| Rahul Skips court heari

விசாரணைக்கு ஆஜராக ராகுலுக்கு புனே கோர்ட் உத்தரவு Savarkar defamation case| Rahul Skips court heari

காங்கிரஸ் எம்பி ராகுல், கடந்த ஆண்டு லண்டனில் நடந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் பற்றி அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக சாவர்க்கரின் பேரன் சத்யாகி சாவர்க்கர் புனே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ராகுல் லண்டனில் பேசினாலும், அந்த பேச்சு புனே உட்பட இந்தியா முழுதும் பரவியது. இதனால் சாவர்க்கர் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என, சத்யாகி சாவர்க்கர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு எம்எல்ஏ, எம்பிக்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் புனே சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட், கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் ராகுல் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், இரு முறையும் ராகுல் கோர்ட்டில் ஆஜராகவில்லை. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ராகுலுக்கு கோர்ட்டில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என அவரது வக்கீல் கேட்டார். கோர்ட்டும் ஒப்புக் கொண்டது. இதையடுத்து, டிசம்பர் 2ம் தேதி நடக்கும் வழக்கு விசாரணையில் ராகுல் அவசியம் ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்றைய விசாரணையிலும் ராகுல் கோர்ட்டில் ஆஜராகவில்லை. பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டியிருப்பதால் ராகுல் ஆஜராக முடியவில்லை என அரவது வக்கீல் பதில் அளித்தார். கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படியும் வலியுறுத்தினார். நேற்றைய விசாரணைக்கு மட்டும் ராகுல் ஆஜராவதில் விலக்கு அளித்த கோர்ட், வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. பார்லிமென்ட் கூட்டத்தொடரை காரணம் காட்டியதால் இந்த விலக்கு அளிக்கப்படுவதாகவும், ஜனவரி 10ம் தேதி நடக்கும் விசாரணையில் ராகுல் கட்டாயம் ஆஜராக வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சாவர்க்கர் பற்றி அவதுாறாக பேசிவிட்டு, வழக்கு விசாரணையை எதிர்கொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் ராகுல், அடுத்த விசாரணையையும் புறக்கணித்தால் அவர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க என்ன செய்ய முடியுமாே அதை செய்வோம் என, சத்யாகி சாவர்க்கர் கூறினார்.

டிச 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை