உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கஞ்சா வழக்கில் மீண்டும் கைதானார் சவுக்கு சங்கர் | Savukku Shankar Arrest | Dinamalar News

கஞ்சா வழக்கில் மீண்டும் கைதானார் சவுக்கு சங்கர் | Savukku Shankar Arrest | Dinamalar News

பிரபல யூ டியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், பெண் போலீஸ் பற்றி அவதூறாக பேசியதாக கடந்த மே மாதம் தேனி பூதிப்புரத்தில் உள்ள ஓட்டலில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா இருந்ததாக போலீசார் தனியாக வழக்குப்பதிந்தனர். இது தொடர்பாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர்கள் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் கஞ்சா கொடுத்ததாக மகேந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குண்டர் சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்குப்பதியப்பட்டது. சவுக்கு சங்கரின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டத்தை தொடர்ந்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு கடந்த செப்டம்பரில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சங்கர் மீதான கஞ்சா வழக்கு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் தொடர்ச்சியாக ஆஜர் ஆகவில்லை. அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துசென்றனர்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !