உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறையில் இருக்கும் சங்கர் மீது புதிய வழக்கு

சிறையில் இருக்கும் சங்கர் மீது புதிய வழக்கு

பெண் போலீசாரை அவதூறாக பேசியது தொடர்பாக யூ டியூபர் சவுக்கு சங்கர் 2 மாதங்களுக்கு முன்பு தேனியில் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது காரில் கஞ்சா இருந்ததாக கூறி தேனி போலீசார் தனியாக வழக்குப்பதிந்தனர். இந்த வழக்குகளில் ஜாமின் பெற்று வெளியே வந்தார். ஆனால், கஞ்சா வழக்கில் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் ஆகாததால், அவருக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இச்சூழலில் தூய்மை பணியாளர் தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பு பற்றி அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டு பேசியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிச 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை