கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிக்க காரணம் இதுதான்
நாட்டின் ஏழ்மை நிலவரம் குறித்த புள்ளிவிவர அறிக்கையை, 2023ம் ஆண்டுடன் ஒப்பிட்டு எஸ்பிஐ வங்கி வெளியிட்டு உள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை, 4 முதல் 4.50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. ஏழ்மையிலும் ஏழ்மை என்பது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது. 2011-12ல் கிராமப்புற வறுமை விகிதம் 25.70 சதவீதமாக இருந்தது. இது, 2022-- 23ல் 7.20 சதவீதமாகவும், 2023-24ல் 4.86 சதவீதமாகவும் குறைந்துள்ளது. நகர்புற வறுமை விகிதம் 2023-24ல் 4.09 சதவீதமக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இது 4.60 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் பணம் செலவிடும் பழக்கம் அதிகரித்து இருப்பது வறுமை குறைப்புக்கு வழிவகுத்துள்ளது.
ஜன 04, 2025