வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வட இந்திய பள்ளிகளில் ஒவ்வொரு திங்கள் கிழமை இருக்கையை மாற்றி மாற்றி உட்கார வைப்பார்கள். அது போல செய்யலாம்.
பள்ளிகளில் 'ப' வடிவ இருக்கை திட்டம் வாபஸ் | school | School education
ேரளாவில் சினிமாவில் வந்ததை பார்த்து பள்ளி வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கை போட அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதன் மூலம் கடைசி இருக்கை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. ஆசிரியரின் கவனம் அனைத்து மாணவர்கள் மீதும் இருக்கும் என கூறப்பட்டது. பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் ஒரு சில பள்ளிகளில் இத்தகைய மாற்றம் செய்யப்பட்டது. இதனை அப்படியே காப்பி அடித்து தமிழக கல்விதுறையும், இனி பள்ளிகளில் ப வடிவில் இருக்கைகள் போட வேண்டும் என உத்தரவிட்டது. முறையாக ஆய்வுகள் நடத்தப்படாமல் சினிமா காட்சிகளை வைத்து அவரச கதியில் போடப்பட்ட இந்த உத்தரவு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏனென்றால் ஒரு வகுப்பறையில் அதிகபட்சம் 30 மாணவர்களுக்குள் இருந்து, வகுப்பறையும் பெரிய அளவில் இருந்தால் தான் இதனை செயல்படுத்த முடியும். தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 50 முதல் 60 மாணவர்கள் வரை உள்ளனர். இப்போது இருக்கும் முறையில் இருக்கைகள் போட்டாலே ஓரத்தில் அமர்ந்து இருக்கும் மாணவர்கள் வெளியே வர சிரமப்படும் அளவுக்கு இட பற்றாக்குறை உள்ளது. இதனை ப வடிவில் மாற்றுவது சாத்தியம் இல்லாத ஒன்று. அப்படியே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள வகுப்பறையாக இருந்தாலும் அதனை ப வடிவில் மாற்றுவது சிரமம். வகுப்பறைகளின் அளவு அதற்கு ஏற்றபடி இல்லை. இந்த சிக்கல்களை எல்லாம் தாண்டி இதனை செயல்படுத்தினாலும், கரும்பலகைக்கு நேராக உள்ள மாணவர்கள் தவிர மாற்றவர்கள் கழுத்தை திருப்பி பக்கவாட்டில் வகுப்பை கவனிக்க வேண்டி வரும். இதனால் மாணவர்களுக்கு கழுத்து சார்ந்த பிரச்னை வரும் என்கின்றனர் நிபுணர்கள். இதையடுத்து ப வடிவ இருக்கை போட பிறப்பித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. உத்தரவிட்ட ஒரே நாளில் அதை ரத்து செய்துள்ள கல்வித்துறை உரிய ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப் படும் என்று சொல்லி சமாளித்துள்ளது.
வட இந்திய பள்ளிகளில் ஒவ்வொரு திங்கள் கிழமை இருக்கையை மாற்றி மாற்றி உட்கார வைப்பார்கள். அது போல செய்யலாம்.