ஒரே நாளில் அடுத்தடுத்து 2 மாணவிகள்: பொள்ளாச்சியில் பகீர் | School Girl | Pollachi
பொள்ளாச்சியை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கிறார். கோடை விடுமுறை முடிந்து திங்களன்று பள்ளிக்கு சென்ற அவர் மாலையில் சோர்வாக வீட்டுக்கு வந்துள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நிலையில் மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பெற்றோர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அலறி துடித்த பெற்றோர் கதறி அழுதனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பிடலுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது செல்போன் சிக்கியது. அதில் கடைசியாக இளைஞர் ஒருவருடன் மாணவி பேசியது ஆய்வில் தெரியவந்தது.