அரசகுமார் மகன், மகள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் School Scam | Arasakumar | CCB Raid
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியதில் 100 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். திமுக முன்னாள் அமைச்சர் மகேஷின் வீடு மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்தது. சொத்து ஆவணங்கள் உட்பட 118 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகி முத்துகுமார் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், கடைகளில் செப்.26ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இன்று சென்னை ஓ.எம்.ஆரில் உள்ள அரசகுமாரின் மகன், மகளுக்கு சொந்தமான வீடுகள், இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. #SchoolScam #Arasakumar #CCBRaid #CorruptionCase #PrivateSchools #DMKLeader #CentralCrimeBranch #OMRSearch #TamilNaduNews #DinamalarNews