உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / லிப்ட் கேட்ட மாணவனை சிதைத்த போதை இளைஞர்கள் | School student attacked

லிப்ட் கேட்ட மாணவனை சிதைத்த போதை இளைஞர்கள் | School student attacked

திருப்பூர் சாமலாபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் - இந்துமதி தம்பதியின் 15 வயது மூத்த மகன் சபரி, சொக்கம்பாளையம் அரசு விடுதியில் தங்கி, காந்திஜி அரசு மேனிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை பள்ளிக்கு கட் அடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல பள்ளி அருகே நின்று பைக்கில் வந்தவர்களிடம் லிப்ட் கேட்டுள்ளார். அவருக்கு ஒரு இளைஞர் லிப்ட் கொடுத்துள்ளார். சபரியை ஏற்றி சென்ற இளைஞருக்கு பின்னால் அவரது நண்பர்கள் 3 பேரும் பைக்கில் வந்துள்ளனர். வழியில் சோமனூரில் காலை 10 மணிக்கெல்லாம் முறைகேடாக விற்கப்படும் டாஸ்மாக் பாரில் மது வாங்கி உள்ளனர்.

ஜூலை 12, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூலை 13, 2025 06:59

இதில் அந்த இளைஞர்களை குறை சொல்வதற்கு முன் இதற்கு மூல காரணம் பொறுப்பற்ற பெற்றோர் என்பதை கவனிக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு சென்று வர பேருந்துக்கு கட்டணம் பெற்றோர்கள் கொடுத்து விடும் பொழுது மாணவர்கள் பேருந்தில் வராமல் ஓசியில் லிப்ட் கேட்டு வருவதன் மூலம் பெற்றோர் கொடுக்கும் காசை மிச்சம் பிடித்து அவர்கள் போதை வஸ்துக்களை வாங்குகிறார்களா? ஒழுங்காக பள்ளிக்கு சென்று வருகிறார்களா? என்று கவனிக்க பெற்றோர்களுக்கு நேரம் கிடைப்பதே இல்லை. அப்பாவுக்கு டாஸ்மாக்கே கதி. அம்மாவுக்கு டிவி யே கதி. ஒருநாளும் பிள்ளைகளின் நடவடிக்கை பற்றி பார்ப்பது இல்லை. பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் மாணவர்களின் நடவடிக்கை, படிப்பு பற்றி கேட்பதே இல்லை. வீட்டில் பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுவதே இல்லை. அப்படி பேசினால் பிள்ளைகளின் நடவடிக்கை மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். அதுனால முதலில் பெற்றோர்கள் திருத்தணும். கடைசியில் நாடு முழுவதும் சோமபானக் கடையை திறந்து வைத்துள்ள "அப்பா"வுக்கு வாழ்த்துக்கள். எப்படியாவது நாட்டை நாசமாக்கினால் சரி.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை