பள்ளி மாணவிகள் ஆசிரியராக மாறி அசத்தல் | Teachers Protest | School Students
2021 சட்டசபை தேர்தலின்போது திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதி அளிக்கப்பட்டது. தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பான டிட்டோ ஜாக் கோரிக்கை குறித்தும் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 31 அம்ச கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. இதனை செயல்படுத்தாத திமுக அரசை கண்டித்து தொடக்க பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் கோவில்பட்டி, கயத்தார், புதூர் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரமில் உள்ள தொடக்க பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி பள்ளியில் மாணவி ஒருவர் சக மாணவர்களுக்கு பாடம் எடுத்து அசத்தினார்.