உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் விசாரணையில் திடுக்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸ் விசாரணையில் திடுக்

ஈரோடு அரச்சலூர் சாலை செட்டிபாளையத்தில் செயல்படும் பள்ளியில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை ஆயிரத்துக்கு மேற்பட்டோர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு கடந்த 12ம் தேதி இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு தேடப்பட்டது. 5 மணிநேர சோதனைக்கு பிறகு எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இமெயிலில் வந்த மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களை பிடிக்க, இமெயில் முகவரியை வைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடந்தது. அப்போது அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது. அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். மாணவர்கள் என்பதால் அவர்களின் எதிர்காலம் கருதி, பெற்றோர் முன்னிலையில் மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். கடந்த செப்டம்பர் 2ம் தேதியும் இதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்தது. அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அம்பலம் ஆனது.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ