/ தினமலர் டிவி
/ பொது
/ 10ம் வகுப்பு மாணவனால் நடத்தப்பட்ட பகீர் சம்பவம் | Nellai | School Students | Love
10ம் வகுப்பு மாணவனால் நடத்தப்பட்ட பகீர் சம்பவம் | Nellai | School Students | Love
திருநெல்வேலி சேரன்மகாதேவியை சேர்ந்த 16 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். தன்னுடன் படிக்கும் சக மாணவியுடன் பழகினான். அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தம்பிக்கு இது பிடிக்கவில்லை. என் அக்காவுடன் நீ எப்படி பழகலாம்? உடனே பேசுவதை நிறுத்து என எச்சரித்துள்ளான். இருந்தும் சிறுவன் மாணவியுடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தம்பி, தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து, சிறுவனை வீடு தேடி சென்று அரிவாளால் வெட்டினான்.
ஆக 06, 2025