தமிழகத்தில் பரவும் ஒட்டுண்ணி நோய்: அறிகுறிகள் என்ன? | Scrub Typhus | Bacterial Infection
#MaduraiHealth #DogOwners #TickBorneDisease #PublicHealth #TamilNadu #PetSafety #HealthWarning #BacterialInfection #Disinfection ஸ்கிரப் டைபஸ் என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்றாகும். ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உயிரினங்களை கடிக்கும்போது, அவர்களுக்கு உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது. பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டோருக்கு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு உள்ளிட்டவற்றுடன் தடிப்புகள் போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. பெரும்பாலும் மலை பகுதியிலும், புதர் மண்டிய இடங்களிலும் வசிக்கும் மக்களிடையே இந்த பாதிப்பு இருந்தது. இப்போது சென்னை போன்ற நகர பகுதிகளிலும், ஸ்கிரப் டைபஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஸ்கிரப் டைபஸ் பாதிப்பு ஏற்பட்டால், பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு, சிவப்பாக சிறிய தடிப்புகள் ஏற்படும்.