/ தினமலர் டிவி
/ பொது
/ வலை உள்ளிட்ட பொருட்களை பறிகொடுத்த மீனவர்கள் Tamilnadu | Fishermen |Sea pirates
வலை உள்ளிட்ட பொருட்களை பறிகொடுத்த மீனவர்கள் Tamilnadu | Fishermen |Sea pirates
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி அருகே செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் 2 படகில் 2 தினங்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இரவு நேரத்தில்,அதிவேக மோட்டார் படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தனர். தமிழக மீனவர்கள் படகுகளில் இருந்த வலை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்தனர். படகின் எஞ்சினை எடுத்துச் செல்ல முயற்சித்தபோது மீனவர்கள் தடுத்தனர். அப்போது கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் 3 மீனவர்கள் காயமடைந்தனர். பொருள்களை இழந்த சோகத்தில் அனைவரும் கரை திரும்பினர்.
ஜூன் 26, 2025