உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 500 மெகாவாட் திறனில் காற்றாலை அமைகிறது! sea windmill | Tamilnadu | Gujarat

500 மெகாவாட் திறனில் காற்றாலை அமைகிறது! sea windmill | Tamilnadu | Gujarat

தமிழகம், குஜராத் உட்பட நாடு முழுதும், நிலத்தில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில், சீசன் காலத்தில் மட்டும், மின்சாரம் கிடைக்கிறது. அதேசமயம், வெளிநாடுகளில் கடலில் அமைக்கப்பட்டு உள்ள காற்றாலையில், அதிக நாட்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. எனவே, இந்தியாவிலும் கடலில் காற்றாலை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆய்வு செய்யப்பட்டதில், தமிழகம், குஜராத் கடலில் சாத்தியக்கூறு இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதற்கட்டமாக, தமிழகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள கடலில் தலா, 500 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ