உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சரின் மகள், மில்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை | GST Intelligence officials | periasamy

அமைச்சரின் மகள், மில்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை | GST Intelligence officials | periasamy

திண்டுக்கல்லில் உள்ள ஊரக வளர்ச்சி அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் கடந்த ஆகஸ்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அவரது மகன் செந்தில்குமார் எம்எல்ஏ, மகள் இந்திராவின் வீடு அவருக்கு சொந்தமான மில்களில் சோதனை நடந்தது. இதில் மில்களில் வரி ஏய்ப்பு நடந்தது தெரியவந்தது. அது தொடர்பாக, ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வெள்ளியன்று அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் சோதனை நடத்தினர். அவரது கணவர் துவாரகநாதனுக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனம் வத்தலகுண்டு அடுத்த ஒட்டுப்பட்டியில் உள்ளது. அங்கும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ரெய்டில் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றில் சிலவற்றை டிஜிட்டல் நகல் எடுத்து சென்றனர். சுமார் 8 மணிநேரம் நடந்த சோதனை, இரவு 9 மணிக்கு முடிந்தது.

நவ 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை