/ தினமலர் டிவி
/ பொது
/ சிசிடிவிக்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நீதிபதி மகாதேவன் உரை | Secure Cam | Chennai
சிசிடிவிக்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நீதிபதி மகாதேவன் உரை | Secure Cam | Chennai
சென்னையில் செக்யூர் கேம் நிறுவனத்தின் மூலம் 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் இலவசமாக பொருத்தப்பட உள்ளன. சமூக மேம்பாடு மற்றும் குழந்தை பாதுகாப்பை மையப்படுத்தி இவை வழங்கப்படுகின்றன. இதற்கான நிகழ்ச்சி கிண்டியில் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் சிறப்புரை ஆற்றினார். பாதுகாப்பு என்பது யோசனை அல்ல; நீதியின் கட்டிடம் நிற்கும் அடித்தளமே அது தான். சமுதாயத்தின் வளர்ச்சி என்பது அதன் அடிப்படை பாதுகாப்பு தான். சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதன் மூலம் நாகரிகம் நிலைத்து நிற்கிறது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஒழுங்குமுறை இல்லாமல் சட்டம் முழுமை அடையாது.
ஏப் 19, 2025