/ தினமலர் டிவி
/ பொது
/ பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு பாதுகாப்பு படையினர் அதிரடி Security Forces Neutralise IED Planted By T
பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு பாதுகாப்பு படையினர் அதிரடி Security Forces Neutralise IED Planted By T
ஜம்மு காஷ்மீரில், ஸ்ரீநகர்- பாராமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் நர்பல் என்ற இடத்தில் மர்ம பெட்டி ஒன்று கிடந்துள்ளது. போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அந்த சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பெட்டியை திறந்து பார்த்த போது, அதில் வெடிகுண்டு இருந்தது. அதை பத்திரமாக அப்புறப்படுத்தி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று வெடிக்க செய்து அழித்தனர்.
பிப் 18, 2026