உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தலைமையாசிரியர்களுக்கு மட்டும் தான் தண்டனையா? | Seeman | DMK | NTK | Stalin | Chennai

தலைமையாசிரியர்களுக்கு மட்டும் தான் தண்டனையா? | Seeman | DMK | NTK | Stalin | Chennai

அரசின் நிர்வாக தவறுகளுக்கு கடைநிலை அதிகாரிகளை பலியாக்குவது தான் திராவிட மாடலா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகர் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்காக நடந்த ஆன்மிக சொற்பொழிவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்காக அப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை மட்டும் பணியிடமாற்றம் செய்து திமுக அரசு தண்டித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பிட்ட பள்ளிகளில் நடந்த சொற்பொழிவு கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்கள் அனுமதியின்றி நடந்ததா? பள்ளிக்கல்வி துறைக்கும் தெரியாமல் நடந்ததா? அப்படி நடந்திருந்தால் அதைவிட மோசமான நிர்வாக செயல்பாடு என்னவாக இருக்க முடியும்?

செப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை