உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீமான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி-முழு விவரம் | seeman vijayalakshmi case | seeman case order

சீமான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி-முழு விவரம் | seeman vijayalakshmi case | seeman case order

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் உறவு வைத்து, பிறகு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்து இருந்தார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் வழக்கு தொடுத்தார். வழக்கை ரத்து செய்ய மறுத்த கோர்ட், சீமான் மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது; இந்த வழக்கை உடனடியாக போலீஸ் விசாரிக்க வேண்டும்; 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டது. இதையடுத்து நடிகை வழக்கு விசாரணை வேகம் பிடித்தது. சீமானுக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்தனர். 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு, அவர் அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். நடிகையிடமும் வாக்குமூலம் பெற்றனர். இதற்கிடையே தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் நாகரத்னா, சுரேஷ் சந்திர சர்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில் வாதாடிய வக்கீல், நடிகை அளித்த புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை