உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் Seeman | NTK | Cattle Welfare | Theni

மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் Seeman | NTK | Cattle Welfare | Theni

வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல தடை உள்ளது. இதனை கண்டித்து தேனி மாவட்டம் போடி அருகே நாம் தமிழர் கட்சியினர் மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். சுமார் 2 ஆயிரம் நாட்டு மாடுகளை அவர் குரங்கணி சாலையில் மலை மீது வனப்பகுதிக்கு ஊர்வலமாக அழைத்து சென்றார். சீமானை தேனி மாவட்ட வனத்துறையினர் தடுத்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி அனைத்து மாடுகளை மலை மீது மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆக 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை