/ தினமலர் டிவி
/ பொது
/ 5 ஆண்டுகள் கொடுத்தால் பூமியை பசுமையாக மாற்றி விடுவேன் Seeman| NTK| seeman tree manadu|
5 ஆண்டுகள் கொடுத்தால் பூமியை பசுமையாக மாற்றி விடுவேன் Seeman| NTK| seeman tree manadu|
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக நூதன போராட்டங்கள் நடத்தி வருகிறார். கள் இறக்க அனுமதி கோரி பனை மரத்தில் ஏறி கள் இறக்கினார். மேய்ச்சல் நிலத்தை ஆக்ரமிப்பதை எதிர்த்து மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, வரும் 30ம் தேதி மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காக பேசுவோம் என்ற தலைப்பில், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் போராட்டம் நடத்த இருக்கிறார். மாநாடு இடத்தை தேர்வு செய்த அவர், அங்கிருந்த மரங்களை கட்டிபிடித்து முத்தமிட்டார். மரங்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
ஆக 20, 2025