சீமான் விவகாரம்: நடிகை ஷாக் வீடியோ seeman vijayalakshmi | vijayalakshmi video | seeman case order
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் உறவு வைத்து, பிறகு ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்து இருந்தார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் சீமான் வழக்கு தொடுத்தார். வழக்கை ரத்து செய்ய மறுத்த கோர்ட், சீமான் மீதான குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது; இதை விசாரித்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவு போட்டது. உடனே சீமானுக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மனு தாக்கல் செய்தார். போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட், 2 மாதத்துக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. இடைப்பட்ட காலத்தில் நடிகைக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பேச்சு வார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.