உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அவரை போல செங்கோட்டையன் செய்ய மாட்டார்: கேபி முனுசாமி senkottaian| kp munusamy| admk| eps| palanisa

அவரை போல செங்கோட்டையன் செய்ய மாட்டார்: கேபி முனுசாமி senkottaian| kp munusamy| admk| eps| palanisa

அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமிக்கு கோவையில் விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். நிகழ்ச்சியில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறாததால், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. இது கட்சிக்குள் சர்ச்சையை கிளப்பியது. இது பற்றி ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், நம்மை வளர்த்து ஆளாக்கிய தலைவர்களின் படங்கள் ஏன் இல்லை என்றுதான் கேட்டேன். அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று உழைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள் என கூறினார். நேற்று நடந்த மற்றொரு கூட்டத்தில் பேசிய அவர், கட்சியில் இருந்த சில துரோகிகளால்தான் கடந்த முறை அந்தியூரில் அதிமுக தோற்றதாக கூறியது கட்சிக்குள் மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. இது பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

பிப் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ