கேள்விகளுக்கு பிடிகொடுக்காமல் பதிலளித்த செங்கோட்டையன் senkottaiyan| admk| Eps|palanisamy
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கோவையில் விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில், மூத்த தலைவர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது சர்ச்சையானது. எம்ஜிஆர். ஜெயலலிதா படத்தை வைக்காமல் நிகழ்ச்சி நடத்தியதால் செல்லவில்லை என விளக்கம் அளித்தார். இதையடுத்து ஈரோட்டில் பொதுக்கூட்டங்களில் பேசிய செங்கோட்டையன் பழனிசாமி பெயரை உச்சரிக்காமல் தவிர்த்தார். இதனால், பழனிசாமி செங்கோட்டையன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பழனிசாமி வெளியிட்ட, சட்டசபை தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவரான செங்கோட்டையன் பெயர் இல்லை என்பதும் பேசுபொருளாகி இருக்கிறது. தேர்தல் பணியை பொறுத்தவரை அவருக்கு அதைவிட பெரிய பொறுப்புகள்கூட வழங்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில், திருச்சியில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு செங்கோட்டையன் பிடி கொடுக்காமல் பதிலளித்தார். அரசியலில் மூத்த தலைவர் இளைய தலைவர் என்று யாருமில்லை. நான் ஒரு சாதாரண தொண்டன் எனக்கூறினார்.