அதிக நாட்கள் சிறையில் இருந்தது யார்? | Senthil Balaji | A Rasa
அரசு வேலை வாங்கி தருவாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கைதானவர் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவரை பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைது செய்தது. செந்தில் பாலாஜி மீது 3,000 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ல் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து செந்தில்பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
செப் 26, 2024