அதிருப்தியுடன் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் | Senthil Balaji Case | Supreme Court
ேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார்கள் கிளம்பின.
அமலாக்கத்துறை வரை களமிறங்கிய இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி சிறை சென்றார்.
இறுதியில் செந்தில் பாலாஜி பணத்தை திருப்பி தருவதாக கூறியதால், வழக்கை வாபஸ் பெற விரும்புவதாக பாதிக்கப்பட்டோர் சென்னை ஐகோர்ட்டில் கூறினர்.
இதன் அடிப்படையில் சென்னை ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.
இதை எதிர்த்து ஒய்.பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
புகார் கொடுத்தோர், முன் வந்தனர் என்பதற்காக வழக்கை முடித்து வைத்தது சரியானது அல்ல என சென்னை ஐகோர்ட் உத்தரவை 2022ல் சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பில் சில வரிகள் தனக்கு எதிராகவும், விசாரணை நீதிமன்றத்தின் போக்கையே மாற்றும் வகையிலும் இருக்கிறது.
அந்த வரிகளை நீக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு சில தினங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது.
மனு மீதான விசாரணை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் வழக்கை வேறொரு தினத்துக்கு ஒத்திவைக்குமாறு கோரினார்.
அதிருப்தியடைந்த நீதிபதிகள், நிவாரணம் கேட்டு வந்தது நீங்கள்.
இரவு முழுதும் உங்கள் வழக்கை படித்துவிட்டு விசாரிக்க வந்தால் சர்வ சாதாரணமாக வழக்கை ஒத்தி வைக்க கேட்கிறீர்கள்.
இது என்ன நடைமுறை என கடிந்து கொண்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.