உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக தலைவர்களை சந்திப்பதை தவிர்ப்பது ஏன் senthilbalaji|mk stalin| Udhayanithi| senthil vs dmk

திமுக தலைவர்களை சந்திப்பதை தவிர்ப்பது ஏன் senthilbalaji|mk stalin| Udhayanithi| senthil vs dmk

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி; டாஸ்மாக் ஊழல், தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரைபேரம் உள்ளிட்ட வழக்குகளை சந்தித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக தலைமையிடம் இருந்து விலகியே இருப்பதாக கட்சியினர் கூறுகின்றனர். திமுக வரலாற்றில் எந்தவொரு சீனியர் நிர்வாகிக்கும் எதிராக இவ்வளவு வழக்குகள் இல்லை. அதனால்தான் திமுக ஆட்சியில், அவரை இலாகா இல்லாத அமைச்சராக ஸ்டாலின் வைத்து இருந்தார். செந்தில் பாலாஜியால் கட்சியிலும், ஆட்சியிலும் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக தற்போதும் சந்தித்து வருகிறது. தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தபோது, செந்தில் மீதான விவகாரங்கள் தலைமைக்கு தெரிந்தன. சீனியர்கள் கூறும் புகார்களாலும் திமுக தலைமையிடம் அவரது மதிப்பு சரிந்துள்ளது. அதனால்தான், குதிரை பேர வழக்கை திமுக கண்டுகொள்ளவில்லை. திமுக தலைமையை நம்பி இனி பயனில்லை என்ற முடிவுக்கு வந்த செந்தில் பாலாஜியும், தம்பி அசோக்கும், மத்திய அமைப்புகளிடம் உள்ள வழக்குகளை தீர்க்க நேரடியாக டெல்லி தலைவர்களிடம் நெருக்கம் காட்டுகின்றனர்.

ஆக 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !