உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / செந்தில் பாலாஜி வழக்கில் விலகியது ஏன்? நீதிபதி சொன்ன காரணம் | senthil balaji case | senthil vs ED

செந்தில் பாலாஜி வழக்கில் விலகியது ஏன்? நீதிபதி சொன்ன காரணம் | senthil balaji case | senthil vs ED

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணையிலிருந்து விலகுவதாக, நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அறிவித்ததை அடுத்து, இந்த வழக்கு வேறு அமர்வில் பட்டியலிடப்படும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. உடனடியாக அவர் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு எதிராக பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்குகள் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகின்றன. அவர், அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்று இருப்பதால் வழக்கில் தாக்கங்கள் ஏற்படும்.

ஜன 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி